
காட்டூரில் இன்று (ஜூன் 20) திறக்கப்படவுள்ள, கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!
திருவாரூர் மாவட்டம், காட்டூர் பகுதியில் 7,000 சதுர அடியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. தேர் வடிவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார், இன்று (ஜூன் 20) திறந்து வைக்கவுள்ளார்.
கலைஞர் கோட்டத்தில் இரண்டு திருமண அரங்கங்களும் முத்துவேலர் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தை பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கவுள்ளார். மேலும், கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.
குண்டர் சட்ட நடவடிக்கை- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!
இந்த நிலையில், காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலைஞர் கோட்டத்திற்கு அமைச்சர்கள் புடைச்சூழ நடந்தே சென்றார். வழியில் இருந்த மக்களிடம் முதலமைச்சர் உரையாடினார்.