Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளச்சாராய உயிரிழப்பு- தமிழிசை பிறப்பித்த அதிரடி உத்தரவு

கள்ளச்சாராய உயிரிழப்பு- தமிழிசை பிறப்பித்த அதிரடி உத்தரவு

-

- Advertisement -

கள்ளச்சாராய உயிரிழப்பு- தமிழிசை பிறப்பித்த அதிரடி உத்தரவு

தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அவை புதுச்சேரியிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதே காரணம் என அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் அதிரடியாக
இடமாற்றப்பட்டுள்ளார்.

special excise duty on liquor puducherry, பாண்டிச்சேரியில் இன்னும் ரெண்டு  மாசத்துக்கு சரக்கு விலை குறையாது! - special excise duty on liquor extended  till march 31 at puducherry - Samayam Tamil

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில், உயிரிழப்புக்கு காரணமான கள்ளச்சாராய மூலப் பொருள்கள் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களால் தமிழகத்துக்கு கடத்தி செல்லப்பட்டு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

we-r-hiring

புதுச்சேரியிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதே காரணம் என அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் அதிரடியாக இடமாற்றப்பட்டுள்ளார். அவர் தலைமை செயலக சார்பு செயலாளராக மாற்றபட்டுள்ளார். இந்த இடமாறுதல் ஆளுநர் தமிழிசை உத்தரவின் பேரில் தலைமைச் செயலர் ராஜீவ்வர்மா அறிவித்துள்ளார்.

MUST READ