Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி

-

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் தேதியன்று மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் இறப்பில் நீதி கேட்டு பெற்றோர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

 

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி

அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் ஆயிரக்கணக்கனோர் திடீர் என்று திரண்டு பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் அந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்கார்கள் பொருட்களை சூறையாடி வாகனங்களை சேதப்படுத்தினர். அந்த சம்பவம் குறித்து நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டது.

மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி

பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த ஜாமீன் மனுக்கள் 2 முறை விசாரணைக்கு வந்தபோது 5 பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் 3-வது முறையாக அவர்களின் ஜாமீன் மனுக்கள் மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சாந்தி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு 5 பேருக்கும் ஜாமீன் வழங்கும்படி வக்கீல்கள் வாதிட்டனர். அதன் பின்னர் அனைவரும் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர்.

 

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி

இந்நிலையில் இன்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளி மாணவி ஸ்ரீமதி தாயாரிடம் கொடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் அடங்கிய சிடிகளில் 26 சிடிகள் செயல்படவில்லை. இதுதொடர்பாக நீதிபதி மாணவியின் தாய் செல்வி வைத்த குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் வகையில் அந்த சிடிகளில் பதிவான காட்சிகள் ஏன் வரவில்லை அல்லது அந்த காட்சிகள் அழிக்கப்பட்டதா அல்லது எதனால் என்பதை தொழில்நுட்ப சான்றுடன் நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பின்னர் வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

MUST READ