கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு எளிதாகப் பயணம் செய்ய 4,260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


பேருந்துகள் இயக்கம் குறித்த விவரங்கள்:
கிளாம்பாக்கத்தில் இருந்து: திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வியாழக்கிழமை 910 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 740 பேருந்துகளும், சனிக்கிழமை 880 பேருந்துகளும் இயக்கப்படும்.
கோயம்பேட்டில் இருந்து: திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வியாழக்கிழமை 210, வெள்ளிக்கிழமை 115 மற்றும் சனிக்கிழமை 115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மாதவரத்தில் இருந்து: கள்ளக்குறிச்சி, திருச்சி, கும்பகோணம், வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு வியாழன் முதல் சனி வரை தினமும் 95 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதர நகரங்களில் இருந்து: பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
திரும்பி வர சிறப்பு வசதி: விடுமுறை முடிந்து பயணிகள் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப ஏதுவாக, ஞாயிற்றுக்கிழமை அன்று 805 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
முன்பதிவு நிலவரம்: சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்யப் பயணிகள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். வியாழக்கிழமை பயணத்திற்கு 14,016 பேரும், வெள்ளிக்கிழமைக்கு 8,688 பேரும், சனிக்கிழமைக்கு 6,459 பேரும், ஞாயிற்றுக்கிழமை திரும்பும் பயணத்திற்கு 14,239 பேரும் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர்.
கோயில்களில் செல்போனுக்கு ரூ.5 கட்டணம் ஏன்? வருவாய் ஈட்டுவதற்காக அல்ல – அமைச்சர் ரமேஷ் விளக்கம்!
