Homeசெய்திகள்தமிழ்நாடுபோராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

-

- Advertisement -
முந்தைய திமுக ஆட்சியின் போது (2021 – 2026) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபசு பெறுவதாகத் தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாநிலச் சட்டமன்றத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

we-r-hiring

ஜனநாயக உரிமைக்கு மதிப்பளிக்கும் முடிவு

கடந்த ஐந்தாண்டு காலத்தில் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தும் போராடியவர்கள் மீது முந்தைய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததாகக் குறிப்பிட்ட முதல்வர் விஜய், அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளால் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

விவசாயிகளை மாநிலத்தின் முதுகெலும்பு என்று வர்ணித்த அவர், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டங்கள், சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பல்வேறு நியாயமான கோரிக்கைகளுக்காகத் திரண்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகளை அரசு திரும்பப் பெறுவதன் மூலம் மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான நம்பிக்கை மேலும் வலுப்பெறும் என்றார்.

வரவேற்பும் கோரிக்கைகளும்

அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது.

அதேசமயம், நீட் (NEET) தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC) தொடர்பான நிலப் போராட்டங்களில் கலந்துகொண்டு வழக்கு எதிர்கொண்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீதான வழக்குகளையும் இதேபோல் வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்துச் சட்டமன்றத்தில் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், இந்தத் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகளை அதிரடியாகத் திரும்பப் பெறப் போவதாக அரசு எடுத்துள்ள இந்த முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்தார் தவெக எம்.எல்.ஏ சத்யபாமா வரலாற்றுச் சிறப்புமிக்க லேடி வெலிங்டன் ஆசனத்தில் அமர்ந்த பெண் தலைவருக்குச் சட்டப்பேரவையில் பலத்த வரவேற்பு

MUST READ