Homeசெய்திகள்தமிழ்நாடுமோடியின் 7.8% ஜிடிபி வளர்ச்சி ஒரு மாயையா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கனகராஜ் அதிரடிப் பேட்டி!

மோடியின் 7.8% ஜிடிபி வளர்ச்சி ஒரு மாயையா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கனகராஜ் அதிரடிப் பேட்டி!

-

- Advertisement -

மத்திய அரசின் 7.8% பொருளாதார வளர்ச்சி (GDP Growth) குறித்த உரிமைக்கோரல்கள் மற்றும் பெருநிறுவனங்களின் பிரம்மாண்ட கடன் தள்ளுபடிகள் ஆகியவற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கனகராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். மோடியின் 7.8% ஜிடிபி வளர்ச்சி ஒரு மாயையா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கனகராஜ் அதிரடிப் பேட்டி!

7.8% ஜிடிபி வளர்ச்சியின் மறுபக்கம்:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதத்தை எட்டியுள்ளதாகக் பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், இது அடித்தட்டு மக்களுக்குச் சென்றடையாத ஒரு போலி பிம்பம் என்று கனகராஜ் குற்றம்சாட்டியுள்ளார். பன்முக வறுமைக் குறியீட்டின் (Multidimensional Poverty Index) அடிப்படையில் நாட்டின் தற்போதைய நிலையை விவரித்த அவர், வெறும் காகிதப் புள்ளிவிவரங்களைக் காட்டி ஏழை எளிய மக்களின் வறுமையை மறைத்துவிட முடியாது என்றார். கவிஞர் வைரமுத்துவின் வரிகளை மேற்கோள் காட்டிய அவர், “பட்டு வேஷ்டி கட்டிக் கனவு கண்டால் மட்டும் போதாது, அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் அரசு என்ன செய்துள்ளது?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

we-r-hiring

கார்ப்பரேட் கடன் தள்ளுபடியும் ஏழைகளின் நிலையையும்:

மத்தியில் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் (2015-2026 வரை) சுமார் 16.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வாராக் கடன்கள் (Bad Loans) ‘ரைட்-ஆப்’ (Write-off) என்ற பெயரில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் மிகக் சொற்பத் தொகையே மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் உள்ள 80 கோடி ஏழை மக்களுக்கு வழங்கப்படும் உணவு மானியத் தொகையை விட, பெருநிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கிய வரிச் சலுகைகளும் தள்ளுபடிகளுமே பன்மடங்கு அதிகம் என்பதை அவர் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார். சாதாரண மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு கார்ப்பரேட்களுக்குச் சாதகமாகச் செயல்படும் அரசு, பொதுத்துறை வங்கிகளின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தி வருகிறது என்றும் சாடினார்.

CJP இயக்கமும் இளைஞர்களின் புதிய எழுச்சியும்:

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புச் சீரழிவுகள் குறித்து CJP போன்ற அமைப்புகள் முன்னெடுத்து வரும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதாக கனகராஜ் பாராட்டினார். கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்களை அந்த அமைப்பு பாராட்டியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இது தேசிய அளவில் சங்க பரிவார அமைப்புகளுக்கு எதிராக உருவெடுத்து வரும் ஒரு வலுவான மாற்றத்திற்கான அடையாளமாக இருக்கக்கூடும் எனத் தெரிவித்தார்.

ஜோதிட வலையில் தவெக? ரத்தன் பண்டிட்டின் விசித்திரக் கணிப்புகளும், மறைக்கப்பட்ட அரசியல் உண்மைகளும்! – ராஜகம்பரன் விளாசல்!

MUST READ