Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை மத்திய சிறை ₹100 கோடி ஊழல் வழக்கு: 4 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல்...

மதுரை மத்திய சிறை ₹100 கோடி ஊழல் வழக்கு: 4 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கெடு!

-

- Advertisement -

லஞ்ச ஒழிப்புத் துறை தவறினால் விசாரணை வேறு அமைப்புக்கு மாற்றப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை மதுரை மத்திய சிறை ₹100 கோடி ஊழல் வழக்கு: 4 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கெடு!

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் 100 கோடி ரூபாய் ஊழல் வழக்கின் விசாரணையை 4 மாதங்களுக்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் விசாரணையை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற நேரிடும் என்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

we-r-hiring

மதுரை மத்திய சிறையில் கைதிகளைக் கொண்டு தபால் கவர்கள், அட்டைகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் தயாரித்து அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அனுப்பியது போலவும், அதற்காகக் கைதிகளுக்குச் சம்பளம் வழங்கியது போலவும் போலிக் கணக்குகள் தயாரிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சுமார் ₹100 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதைச் சிறைக்கைதிகள் உரிமைகள் மைய இயக்குநரும் வழக்கறிஞருமான பி.புகழேந்தி தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் வெளிக் கொண்டுவந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், புகாரில் முகாந்திரம் இருந்தால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு விவாதம் இந்நிலையில், மதுரை சிறைவாசியின் மனைவியான கோகிலா என்பவர் தாக்கல் செய்த மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில், சிறைப் பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றிய தனது கணவருக்குச் சம்பளமோ, நன்னடத்தை மதிப்பெண்களோ வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகழேந்தி, “சிறைவாசிகளுக்குச் சம்பளம் கொடுத்ததாகக் கூறி போலிக் கணக்கு உருவாக்கி ₹100 கோடி ஊழல் செய்த வழக்கு விசாரணை மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது” என்று சுட்டிக்காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட காவலத்துறை தரப்பு வழக்கறிஞர், “விசாரணையை விரைவாக முடித்துச் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

நீதிபதிகள் அதிரடி உத்தரவு & எச்சரிக்கை இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கெடு விடிப்பு: மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை உடனடியாக அமைத்து, 4 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வேறொரு அமைப்புக்கு மாற்றம்: நிர்ணயிக்கப்பட்ட 4 மாத காலத்திற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையைத் தாக்கல் செய்யத் தவறினால், இவ்வழக்கின் விசாரணை உடனடியாக வேறு அமைப்புக்கு மாற்றப்படும்.

துறைரீதியான நடவடிக்கை: இதுமட்டுமின்றி, இச்சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்க உத்தரவிடப்படும்.

விஜய் அரசு புதிய அதிரடி திட்டம்! 1865-ம் ஆண்டு முதல் உள்ள அரசு ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுமா?

MUST READ