Homeசெய்திகள்தமிழ்நாடு"ரூ.4 கோடியில் கட்டிய மேட்டூர் அணையை திறக்க ரூ.5 கோடி செலவா?" – திருச்சியில் பாஜக...

“ரூ.4 கோடியில் கட்டிய மேட்டூர் அணையை திறக்க ரூ.5 கோடி செலவா?” – திருச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேட்டி!

-

- Advertisement -

“மேட்டூர் அணையைத் திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் ரூ.5 கோடி செலவு செய்து அங்கு சென்று வந்துள்ளார்; அவர் மிகவும் செலவு வைக்கும் காஸ்ட்லி முதலமைச்சராக இருக்கிறார்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்."ரூ.4 கோடியில் கட்டிய மேட்டூர் அணையை திறக்க ரூ.5 கோடி செலவா?" – திருச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேட்டி!

திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியின் விவரம் பின் வருமாறு,

we-r-hiring

மேட்டூர் அணை திறப்பு குறித்து சாடல்
“மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்தில் அதன் மொத்த கட்டுமானச் செலவே நான்கு கோடி ரூபாய் தான். ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய் அந்த அணையைத் திறந்து வைப்பதற்காக மட்டும் ஐந்து கோடி ரூபாய் செலவு செய்து அங்கு சென்று வந்துள்ளார். அவர் ஒரு மிகக் காஸ்ட்லி முதலமைச்சராக விளங்குகிறார். மேலும், தற்போது மேட்டூர் அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தச் சூழலில் காவிரியின் கடைமடைப் பகுதிகள் வரை நீர் போய்ச் சேருமா என்பதில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.”

பிரதமர் வேட்பாளர் போட்டியில் ஒற்றுமையின்மை
எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்துப் பேசிய அவர், “பிரதமராவதற்கு ராகுல் காந்திக்குத் தகுதி உள்ளதா அல்லது விஜய்க்குத் தகுதி உள்ளதா என்பது இரண்டாவது விஷயம். ஆனால், கூட்டணியில் உள்ள அவர்களுக்குள்ளேயே யார் பிரதமர் வேட்பாளர் என்பதில் எந்தவொரு ஒற்றுமையும் இல்லாமல் இருக்கிறது. தங்களுக்குள் ஒற்றுமை இல்லாத இவர்கள் எவ்வாறு மக்களுக்கு நன்மை செய்வார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.

சட்டமன்ற நேரலைக்குக் கண்டனம்
தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், “தமிழக சட்டமன்ற நேரலையை மக்கள் ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பதாக த.வெ.க அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் இதன் விளைவு மிகவும் மோசமானதாக இருக்கும்” என எச்சரித்தார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் இந்தத் தொடர் விமர்சனங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 12ஆம் வகுப்பு காலாண்டுத் தேர்வு செப்.17 முதல் – முழு அட்டவணை வெளியானது!

MUST READ