ஆந்திர அரசு முதலில் கோவையில், இப்போது சென்னையில் — தமிழகத்தில் இயங்கும் MSME-களை குறிவைத்து நேரடியாக சந்தித்து, உள்கட்டமைப்பு, துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட வசதிகளை முன்வைத்து முதலீடுகளை ஈர்க்க தீவிரமாக களமிறங்கியுள்ளது.


தமிழக MSME-களுக்காக நமது அரசு இதுபோன்ற நேரடி உறுதியளிக்கும் சந்திப்புகளை நடத்துகிறதா?
இங்கே MSME-கள் நீண்டகாலமாக கோரும் EB Fixed Charges குறைப்பு, Peak Hour Charges நிவாரணம் போன்ற அடிப்படை கோரிக்கைகளுக்கே இன்னும் தீர்வு இல்லை.
ஒருபுறம் ஆந்திரா பெருநிறுவன முதலீடுகளை தமிழகத்துடன் போட்டிபோட்டு ஈர்க்கிறது. மறுபுறம் தமிழக MSME-களையே நேரடியாக அணுகி அழைக்கிறது.
இதே அலட்சியம் தொடர்ந்தால், MSME முதலீடுகள் மட்டுமல்ல — தொழில்களே தமிழகத்திலிருந்து இடம்பெயரும் அபாயம் உள்ளது.
வந்த முதலீட்டை கொண்டாடுவது மட்டும் வளர்ச்சி அல்ல; இருக்கும் தொழில்களை தக்கவைப்பதும் அரசின் முக்கிய கடமை!
தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
நாம் என்ன செய்யப் போகிறோம்?
