தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவலில் மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது அரண்மனையில் உள்ள உருவச்சிலைக்குக் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்துப் பேசினார்.

“சுதந்திரப் போராட்டத்தில் ஒரு செங்கல் கூட தூக்காதவர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள்!”
நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர்:
வரலாற்று நாயகன் பூலித்தேவன்: “இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரரான பூலித்தேவனுக்கு மரியாதை செலுத்துவதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுதந்திரப் போராட்டத்தில் ஒரு செங்கலைக்கூட எடுத்து வைக்காத கட்சிகள் எல்லாம் இன்று சுதந்திரப் போராட்ட வீரர்களைச் சொந்தம் கொண்டாடப் பார்க்கின்றன.”
நாடாளுமன்றத்தில் சிலை வைக்கக் கோரிக்கை: “மாவீரன் பூலித்தேவருக்கு உரிய அனைத்து மரியாதைகளும் கிடைக்கப்பெற வேண்டும். டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் பூலித்தேவனுக்குச் சிலை அமைக்கப்பட வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் விஜயிடம் வலியுறுத்த இருக்கிறோம்.”
டெல்லியில் ஜனநாயகம் இல்லை; தமிழக சட்டமன்றம் பரவாயில்லை!
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து ஒப்பிட்டுப் பேசிய அவர்:
நடுநிலையான சபாநாயகர்: “தமிழகச் சபாநாயகர் பிரபாகர் அவையை மிகவும் நடுநிலையோடு நடத்துகிறார். தவறு நடக்கும் போது எங்கள் தரப்பு அமைச்சர்களைக் கூட அவர் கண்டிக்கத் தவறுவதில்லை.”
டெல்லி vs தமிழ்நாடு: “டெல்லி நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை ஜனநாயகமே இல்லாத சூழல் உள்ளது; எதிர்க்கட்சிகள் பக்கம் கேமராவைக் கூடத் திருப்புவதில்லை. ஆனால், தமிழகச் சட்டமன்றம் மக்களுடைய ஜீவாதாரப் பிரச்சினைகளையும் உரிமைகளையும் சுதந்திரமாகப் பேசக்கூடிய ஜனநாயகக் களமாகத் திகழ்கிறது.”
ரீல்ஸ் (Reels) என்பது ஊடகத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சி!
சமூக வலைதளங்களில் வெளியாகும் ‘ரீல்ஸ்’ பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர்:
ரீல்ஸ்களை யாரும் கேவலமாக நினைக்கக் கூடாது; அதை ஒரு குறையாகப் பார்க்கக் வேண்டாம். சொல்ல வந்த கருத்துகளைச் சுருக்கமாகச் சொல்லிப் புரியவைக்கும் பழக்கத்தை அது கற்றுத் தருகிறது. இது ஊடகத் துறையின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியே தவிர வேறில்லை.”
பிரதமர் வேட்பாளர் சர்ச்சை மற்றும் கூட்டணிக் கணக்குகள் கூட்டணி மற்றும் அரசியல் சூழல் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில்:
ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர்: “விஜய் பிரதமர் வேட்பாளரா என்பது தொடர்பான கேள்விகளுக்கு நாங்கள் ஏற்கனவே முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம். ராகுல் காந்தி தான் எங்களின் ஒரே பிரதமர் வேட்பாளர் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நல்லாட்சி தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ராகுல் காந்திக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமான சகோதரத்துவம் கொண்டது.”
நரி வேலை செய்யும் கட்சிகள்: “சில கட்சிகள் எங்களைக் குழப்ப நரி வேலைகளைச் செய்து வருகின்றன; ஆனால் நாங்கள் அந்தப் பொறாமை வலையில் சிக்கமாட்டோம். பலமுள்ளவர்களைப் பார்த்து நரிகள் பொறாமைப்படுவது இயல்புதானே?”
எங்கள் குணம் உயிரைக் கொடுப்பது: “பாஜகவை நாங்கள் எப்போதும் தீவிரமாக எதிர்க்கிறோம்; அவர்கள் கூறுவதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. வரலாற்று ரீதியாக எங்களோடு இருந்தவர்களுக்கு நாங்கள் பல வழிகளில் உறுதுணையாக இருந்திருக்கிறோம்; அதற்காகப் பலமுறை காயப்பட்டும் இருக்கிறோம். இருப்பினும், ‘எங்களை நம்பி வந்தவர்களுக்கு உயிரைக் கொடுப்பதுதான் எங்கள் அரசியல் குணம்'” என்று பேசினார்.
