spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்ஸ்டாகிராமில் கத்தியை வைத்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்கள் 2 பேர் கைது

இன்ஸ்டாகிராமில் கத்தியை வைத்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்கள் 2 பேர் கைது

-

- Advertisement -

இன்ஸ்டாகிராமில் கத்தியை வைத்து ரீல்ஸ் வெளியிட்ட இரண்டு இளைஞர்களை குளத்தூர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

we-r-hiring

இன்ஸ்டாகிராமில் இரு வாலிபர்கள் கத்தியை வைத்து சினிமா பட டயலாக்குடன் ரீல்ஸ் வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் வீடியோ வெளியிட்ட நபரின் ஐபி.எண்ணை வைத்து தீவிரமாக தேடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த நபர் வந்தபோது போலீசார் மடக்கி பிடித்து அவரது செல்போனை பறிமுதல் செய்து அந்த இளைஞரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கொளத்தூர் பகுதியை சேர்ந்த சந்துரு19 செல்போனை ஆய்வு செய்ததில் இன்ஸ்டாகிராமில் அவரது நண்பர் ரஞ்சித் என்பவர் உடன் சேர்ந்து கத்தியை வைத்து சினிமா பாடலுக்கு ரீல் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர் மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் ரஞ்சித் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே ரீல்சும் வேண்டாம், வன்முறையும் வேண்டாம், நல்லொழுக்கமே நன்மை பயக்கும் என சென்னை காவல்துறை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

 

 

 

 

MUST READ