spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமழையில் காத்திருக்காதீர்கள்! இங்கு ரஜினி இல்லை- லதா ரஜினிகாந்த்

மழையில் காத்திருக்காதீர்கள்! இங்கு ரஜினி இல்லை- லதா ரஜினிகாந்த்

-

- Advertisement -

மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம், ரஜினி இங்கு இல்லை. அனைவரும் கலைந்து செல்லுங்கள் என ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த ரசிகர்களிடம் லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மழையில் காத்திருக்காதீர்கள்! இங்கு ரஜினி இல்லை- லதா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73-வது பிறந்த நாளை ஒட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் அவரது ரசிகர்கள் மாநிலம் முழுவதும் இருந்து வருகை தந்து வருகின்றனர். போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் இல்லை. ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் ரஜினிகாந்த் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. போயஸ் கார்டன் முழுவதும் சுவர்களில் ரஜினிகாந்தை வாழ்த்தி அவர்களது ரசிகர்களால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் போயஸ் கார்டன் பகுதியில் கொட்டும் மழையிலும் குவிந்துள்ளனர். அங்கு 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

we-r-hiring

இந்நிலையில் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறார். இங்கு இல்லை என உதவியாளர்கள் கூறியும் ரசிகர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர். இதனால் வீட்டிற்குள் இருந்த ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த், வெளியே வந்து ரசிகர்களிடம் மழை பெய்து வருவதால் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம், ரஜினி இங்கு இல்லை, அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறினார்.

MUST READ