திண்டுக்கல்லில் 8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கிய பொம்மை காரின் LED லைட் , அதனை பாதுகாப்பாக அகற்றிய டாக்டர்கள்
திண்டுக்கல் குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு 8 மாத குழந்தை காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அக்.18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மூச்சுத்திணறல், இருமலால் அவதியுற்ற குழந்தையை மருத்துவமனையில் ஒரு எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்த போது நுரையீரலில் ஊசி போன்ற பொருள் இருப்பதைக் காட்டி உள்ளது.
பின்னர் குழந்தை GRH-க்கு (மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை) பரிந்துரைக்கப்பட்டு நவம்பர் 1ம் தேதி குழந்தை அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த ரிமோட் கண்ட்ரோல் காரின் LED லைட்டை பிராங்கோஸ்கோபி மூலம் மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் பாதுகாப்பாக அகற்றி உள்ளனர்.
குழந்தைகள் பொம்மைகளின் சிறிய பகுதிகளை விழுங்கவோ அல்லது உள்ளிழுக்கவோ வாய்ப்புள்ளது, பின்னர் அவை வயிறு அல்லது நுரையீரலில் சென்றடையும் என டாக்டர்கள் தெரிவித்தள்ளனர்.
இதற்கு GRH Dearn டாக்டர் எல். அருள் சுந்தரேஷ் குமார் கூறியதாவது,
குறிப்பாக மிக சிறு வயதில், சிறிய பாகங்களைக் கொண்ட பொம்மைகளுடன் விளையாடும்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார். ஒரு குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ , குழந்தை தற்செயலாக எதையாவது விழுங்கியிருக்கலாம் அல்லது சுவாசித்திருக்கலாம் என்று சந்தேகித்தால் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் தெரிவிப்பது அவசியம்.
மேலும் குழந்தைகள் விழுங்க வாய்ப்புள்ள சிறு பொருள்களை பெற்றோர் விளையாட அனுமதிக்க கூடாதென டாக்டர்கள் வலியுறுத்தினர்.