சர்வதேச ஆட்டங்களுக்கு முழுக்கு போட்டு விட்டு, ஐபிஎல் ஆட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி, இயற்கை வேளாண்மையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதை அடுத்து அவர் சினிமா தயாரிப்பிலும் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார். மனைவி சாக்ஷி உடன் இணைந்து தோணி என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.
தமிழில் இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு எல்ஜிஎம். அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்க ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். காதல், காமெடி கொண்ட ஃபேமிலி டிராமாவாக உருவாகும் இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார் தோனி.
முன்னதாக முன்னதாக சேப்பாக்கம் மைதானத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா உள்ளிட்டோர் ரசிகர் மத்தியில் அமர்ந்திருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவளித்துள்ளனர். அந்த புகைப்படங்களுடன் எல்ஜிஎம் படத்தின் ஃபர்ஸ்ட் கை தோனி ரசிகர்கள் வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றார்கள்.