Homeசெய்திகள்தமிழ்நாடுநீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

-

படுகர் இன மக்களின் குல தெய்வ பண்டிகையான ஹெத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிக்கபட்டுள்ளது.

படுகர் திருவிழா

நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவிலான படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் தங்களின் குல தெய்வமாக ஹெத்தை அம்மனை வழிப்பட்டு வரும் நிலையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஹெத்தை பண்டிகை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான திருவிழா கோத்தகிரி அருகே உள்ள பேரகண்ணி ஹெத்தையம்மன் கோவில் சிறப்பு பூஜைகளுடன் நேற்று தொடங்கியது.

முக்கிய விழா நாளை காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளதால் ஒரு லட்சத்திற்கும் மேற்ட்ட படுகர் இன மக்கள் கோவிலுக்கு வர உள்ளனர். அதனையடுத்து நாளை நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடபட்டுள்ளது. பேரகண்ணி ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா தொடங்கியதை அடுத்து பெத்தளா, ஜெகதளா உள்ளிட்ட படுகர் இனமக்களின் பல்வேறு கிராமங்களிலும் ஒரு வாரத்திற்கு இந்த திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே மாவட்டத்தில் நாளை உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் எதிர் வரும் 21-ம் தேதி பணி நாளாகவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

MUST READ