spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'மக்களவைத் தேர்தல் 2024'- சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

‘மக்களவைத் தேர்தல் 2024’- சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

-

- Advertisement -

 

சிறப்பு பேருந்து

we-r-hiring

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தமிழ்நாட்டில் 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

விசிக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்..!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 17, 18 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் பெருந்துகளுடன் 2,970 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், சென்னையில் இருந்து இரண்டு நாட்களில் மொத்தமாக 7,154 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஏப்ரல் 17, 18 ஆகிய தேதிகளில் பிற ஊர்களில் இருந்து 3,060 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பிறகு பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப வருகிற ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 1,825 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளனர்.

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள் – ஈபிஎஸ்

பிற முக்கியமான ஊர்களுக்கும் 2,295 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ