Homeசெய்திகள்தமிழ்நாடு"மக்களவைத் தேர்தலுடன் விக்கிரவாண்டிக்கு தேர்தலா?"- தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்!

“மக்களவைத் தேர்தலுடன் விக்கிரவாண்டிக்கு தேர்தலா?”- தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்!

-

 

"தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்'- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி!
Video Crop Image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவுச் செய்யும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

கொளத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!

மக்களவைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, “தமிழகத்தில் இதுவரை ரூபாய் 208 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரொக்கமாக ரூபாய் 88.12 கோடியும், ரூபாய் 4.53 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்தாலும் ஜூன் 04- ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் தொடரும்.

விளவங்கோட்டில் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம்!

ரூபாய் 4 கோடி பறிமுதல் தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடக்கிறது. ரூபாய் 4 கோடி பறிமுதல் தொடர்பாக செலவினப் பார்வையாளர் விசாரணை அறிக்கையை சமர்ப்பிபார். இதுவரை 2.08 கோடி வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப்கள் வழங்கப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவுச் செய்யும். விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ