Homeசெய்திகள்தமிழ்நாடுமக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!

-

 

மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே சுடுகாட்டிற்கு செல்ல தனிப்பாதை அமைக்கப்படாததைக் கண்டித்து, அந்த கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகை- அமைச்சர் உதயநிதி Vs அண்ணாமலை!

காட்பாடி அருகே உள்ள பொன்னை பாலேங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கோடவார் பள்ளி பகுதியில் சுமார் 100- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்காக பாலாற்று கரையோரம் சுடுகாடு அமைந்துள்ளது. இங்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு சுடுகாடு கொட்டகை மற்றும் ஈமச்சடங்கு மண்டபம் எதுவும் இல்லாத நிலையில், சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

உடலை தனியார் இடத்தின் வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதால் அவ்வழியாக செல்லும் போது, அவர்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. சுடுகாட்டிற்கு செல்ல தனிப்பாதை அமைத்து தர வலியுறுத்தி மனு அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைந்தது!

இதனால் அதிருப்தி அடைந்துள்ள கிராம மக்கள் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து, வீடுகளுக்கு வெளியே கருப்புக்கொடியை ஏற்றி வைத்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ