spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுலாரியை மடக்கிப் பிடித்த மருத்துவ தம்பதிக்கு நேர்ந்த துயரம்!

லாரியை மடக்கிப் பிடித்த மருத்துவ தம்பதிக்கு நேர்ந்த துயரம்!

-

- Advertisement -

 

லாரியை மடக்கிப் பிடித்த மருத்துவ தம்பதிக்கு நேர்ந்த துயரம்!
Video Crop Image

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் விபத்து தொடர்பாக ஏற்பட்ட, வாக்குவாதத்தில் மனைவி கண் முன்னே மருத்துவரைத் தாக்கிய லாரி ஓட்டுநர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.

we-r-hiring

17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை!

சென்னை குரோம்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த மருத்துவத் தம்பதிகளான மேகஷ்யா மற்றும் தாரணி ஆகியோர் பல்லாவரம் நோக்கி, காரில் சென்றுள்ளனர். ஸ்பான்ஸ மேம்பாலம் அருகில் டாரஸ் லாரி உரசியதில் காரின் பக்கவாட்டு பகுதி சேதமானது.

உடனடியாக லாரியை மடக்கிப் பிடித்த மருத்துவர், காவல்துறையினர் வரும் வரை காத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இதில், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. லாரி ஓட்டுநர் சதீஷ், லாரியை எடுத்துச் செல்ல முயன்ற போது, மேகஷியாம் லாரி சாவியை எடுத்துக் கொண்டார்.

இதில், ஆத்திரமடைந்த சதீஷ் மற்றும் மற்றொரு ஓட்டுநர் ஆகியோர் மருத்துவரைத் தாக்கியுள்ளனர். இதனைக் கண்டு அவரது மனைவி கதறி அழுதுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஓட்டுநர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமிக்க பரிந்துரை!

பின்னர், மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில், ஓட்டுநர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.

MUST READ