spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமு.க.ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சி-விஜயதாரணி பார்வை

மு.க.ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சி-விஜயதாரணி பார்வை

-

- Advertisement -

மு.க.ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சி-விஜயதாரணி பார்வையிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பார்வையிட்டார்.

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.

we-r-hiring

இக்கண்காட்சியை மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். பல கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கண்காட்சியை பார்வையிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு மகிழ்ந்தார்.

பின்னர் இது குறித்து கூறும்போது, அமைச்சர் பி.கே.சேகர்பாபுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டேன். மிகவும் சிறப்பாக இருந்தது. இதற்காக உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.

MUST READ