Homeசெய்திகள்தமிழ்நாடு'சென்னை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா'- மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார் குடியரசுத் தலைவர்!

‘சென்னை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா’- மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார் குடியரசுத் தலைவர்!

-

 

சென்னை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா- மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார் குடியரசுத் தலைவர்!
Photo: President Of India

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவிருக்கிறார்.

நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது சந்திரயான்- 3!

சென்னை பல்கலைக்கழகத்தில் 165வது பட்டமளிப்பு விழா, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கில் இன்று (ஆகஸ்ட் 06) காலை 11.00 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மாணவ, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். இவ்விழாவில், தங்கப்பதக்கத்துடன் 97 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளது.

இதனை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்புரையாற்றவிருக்கிறார். மேலும் 100 மாணவர்களுக்கு வெகுமதியுடன் பட்டமும், ஆராய்ச்சிப் படிப்பை முடித்த 550 மாணவ, மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவிருக்கின்றனர்.

இவர்களுடன் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவிகளும் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் வீரமரணம்!

விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். பட்டமளிப்பு விழா நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகம் வளாகம் முழுவதும், காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

MUST READ