spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஏறுதழுவுதல் அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

ஏறுதழுவுதல் அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

-

- Advertisement -

 

ஏறுதழுவுதல் அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

we-r-hiring

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கீழக்கரையில் ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் முதன்முறையாக ரூபாய் 64 கோடி மதிப்பீட்டில் கீழக்கரையில் ஏறுதழுவுதலுக்காகத் நிரந்தர அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. கீழக்கரை கிராமத்தில் 83,462சதுர அடியில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5,000 பார்வையாளர்கள் அமர்ந்து கண்டுக்களிக்கும் வகையில் அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன், எச். வினோத் கூட்டணியின் ‘KH233’…… தாமதத்திற்கான காரணம் என்ன?

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்பான பழங்கால கல்வெட்டுகள், அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்துக்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விழாவில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மூர்த்தி, ஐ.பெரியசாமி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எ.வ.வேலு, மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி மேயர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கமலும் இல்லை கார்த்தியும் இல்லை….. அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோ…. எச். வினோத் கொடுத்த ட்விஸ்ட்!

அரங்கத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், 300 காளைகளும், 300 காளையர்களும் கலந்து கொள்கின்றனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ