Homeசெய்திகள்தமிழ்நாடுவாக்கு எண்ணும் மையத்தில் “ஜன நாயகன்” பார்த்தவர் கைது!

வாக்கு எண்ணும் மையத்தில் “ஜன நாயகன்” பார்த்தவர் கைது!

-

- Advertisement -

அண்ணா யுனிவர்சிட்டி வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறைவில் “ஜனநாயகன்” படம் பார்த்த நபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.வாக்கு எண்ணும் மையத்தில் “ஜன நாயகன்” பார்த்தவர் கைது!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் பல்வேறு வாக்கு எண்ணும் மையங்களின் ஸ்ட்ராங் ரூம்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் மே 4ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் கணக்கிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதன்முறையாக போட்டியிட்டுள்ளது. கூட்டணி இன்றி தனித்து 233 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள இந்தக் கட்சி, தேர்தலில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

இதற்கிடையில், தவெக ஆதரவாளரான யுவராஜ் என்பவர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தின் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து, விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். “ஓட்டு பெட்டி இருக்கும் இடத்திலும் நம்ம விஜய் தான்” என அவர் பதிவிட்டிருந்தது வைரலாகி, கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.

மேலும், இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான இந்தப் படத்தை, பாதுகாப்பு மிகுந்த வாக்கு எண்ணும் மையத்திலேயே பார்த்தது பெரும் கேள்விகளை எழுப்பியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஒப்பந்த ஊழியரான யுவராஜ் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

‘ஜனநாயகன்’ திரைப்படம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியதாக கூறப்படுகிறது. சென்சார் பிரச்சினைகளால் வெளியீடு தாமதமான நிலையில், படம் திடீரென இணையத்தில் கசிந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிகழ்வுகளுக்கு இடையில், நடிகர் விஜய் தனது இறுதி தேர்தல் பிரச்சார உரையில், குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் தன்னை ஆதரிக்க வாக்களிக்கும்படி வலியுறுத்தியதும் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!

MUST READ