சென்னை மெட்ரோ ரயில்களைப் பராமரிக்கும் பணிகளுக்கு ரூபாய் 21.16 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-1-ல் கோயம்பேடு பணிமனை மற்றும் விம்கோ நகர் பணிமனையில் மெட்ரோ இரயில்களை பராமரிப்பது, முன்னேற்ற திட்டமிடல் மற்றும் விசாரணை அலுவலகம்(PPIO) மற்றும் பணிமனை கட்டுப்பாட்டு சேவைகளுக்கான ஒப்பந்தம் MEMCO அசோசியேட்ஸ் (இந்தியா) பிரைவேட் நிறுவனத்திற்கு ரூபாய் 21.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பு கடிதம் MEMCO அசோசியேட்ஸ் (இந்தியா) பிரைவேட் நிறுவனத்திற்கு நவம்பர் 09- ஆம் தேதி அன்று வழங்கப்பட்டுள்ளது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும்இயக்கம்) மற்றும் MEMCO அசோசியேட்ஸ் (இந்தியா) பிரைவேட் நிறுவனத்தின் பொதுமேலாளர் -மெட்ரோ திட்டம் ஜி.வீராகுமார் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் – டாக்டர் இராமதாஸ் வேண்டுகோள்!
கட்டம்-1-ல் கோயம்பேடு பணிமனை மற்றும் விம்கோ நகர் பணிமனையில் மெட்ரோ இரயில்களைபராமரிப்பது, முன்னேற்ற திட்டமிடல் மற்றும் விசாரணை அலுவலகம் (PPIO) மற்றும் பணிமனைகட்டுப்பாட்டு மையம் பராமரிப்பது போன்றவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), இணை பொது மேலாளர் சி.பாலமுருகன், (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), மெம்கோவின் முதன்மை செயல் அதிகாரி ஜோஷ்வா ராஜ்குமார், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் மெம்கோவின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.”