Homeசெய்திகள்தமிழ்நாடுஆட்டோ மீது  விழுந்த மினி லாரி – 5 பேர் படுகாயம்

ஆட்டோ மீது  விழுந்த மினி லாரி – 5 பேர் படுகாயம்

-

- Advertisement -

ஆட்டோ மீது  விழுந்த மினி லாரி – 5 பேர் படுகாயம்

செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலை அருகே சென்னையில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற மினி லாரி நிலை தடுமாறி ஆட்டோ ஸ்டாண்டின் உள்ளேப் புகுந்தது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து ஆட்டோக்கள் மீது மினி லாரி மோதியது. இதனால் ஐந்து ஆட்டோக்கள் பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது.

ஆட்டோ மீது  விழுந்த மினி லாரி – 5 பேர் படுகாயம்
ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது

அப்போது ஆட்டோவில் உட்கார்ந்திருந்த ஆட்டோ டிரைவர்கள் ஏழுமலை, கோவிந்தன், உதயசங்கர், கங்கா, ரமேஷ், ஆகியோர் பலத்த படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆட்டோ மீது  விழுந்த மினி லாரி – 5 பேர் படுகாயம்
அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு

விபத்து ஏற்பட்ட ஆட்டோக்களின் டிரைவர்கள் கூறியுள்ளதாவது, ஆட்டோவை நம்பி தான் எங்களுக்கு தினமும் வாழ்வாதாரம். மேலும் பள்ளி திறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வாழ்வாதாரம் எங்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது என்று குறிப்பிட்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

MUST READ