Homeசெய்திகள்தமிழ்நாடு"கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புரட்டிப் பார்க்க வேண்டும்": சிபிஐ செயலாளர் வீரபாண்டியன்...

“கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புரட்டிப் பார்க்க வேண்டும்”: சிபிஐ செயலாளர் வீரபாண்டியன் ஆவேசப் பேட்டி!

-

- Advertisement -

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த அவர், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் அனல் பறக்கும் கருத்துக்களைத் தெரிவித்தார்."கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புரட்டிப் பார்க்க வேண்டும்": சிபிஐ செயலாளர் வீரபாண்டியன் ஆவேசப் பேட்டி!

வேட்பாளர் சுகந்திக்கு ஆதரவாகத் தீவிர பிரச்சாரம்
மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட மையூர், சம்பாதிநல்லூர், அத்தியூர், சிதண்டி, பிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தியை ஆதரித்து சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர் கூறியதாவது,

we-r-hiring

ஏழை எளிய மக்களின் குறைகளையும், பொதுமக்களின் உண்மையான தேவைகளையும் சட்டமன்றத்தில் துணிச்சலுடன் எடுத்துரைக்க தோழர் சுகந்திக்கு பொதுமக்கள் அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். கடந்த 100 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது; நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட வரலாறும் கிடையாது. இதுவே கம்யூனிஸ்டுகளின் மாபெரும் சாதனையாகும்.

“அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கம்யூனிஸ்ட் வரலாட்டைப் படிக்க வேண்டும்”
பிரச்சாரத்தின் இடையே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துப் பேசிய வீரபாண்டியன், “அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும்; படித்துவிட்டு அதனை முதலமைச்சரிடமும் சொல்ல வேண்டும். அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் நிதானத்துடன் இருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளைக் கூறுகையில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் பேச வேண்டும். கம்யூனிஸ்டுகள் எப்போதுமே கையூட்டுப் பெற்றதில்லை, அதனை வேடிக்கை பார்த்ததும் கிடையாது” எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

“நாங்கள் அரசின் பக்கமல்ல; உழைக்கும் மக்களின் பக்கம்!”
தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசுடனான தற்போதைய ஆதரவு நிலைப்பாடு மற்றும் கொள்கை நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்தினார், “எங்களுக்கு ஆட்சியை கவிழ்க்கிற சிந்தனையோ, கல்லெறிந்து வன்முறையைத் தூண்டும் எண்ணமோ கிடையாது. யாருக்கும் நிர்பந்தம் தருகிறவர்களாக நாங்கள் இல்லை. ஆனால், எங்கள் ஆதரவு தேவைப்பட்டாலும் சரி, தேவைப்படாவிட்டாலும் சரி, நாங்கள் ஒருபோதும் அரசின் பக்கம் இருக்க மாட்டோம்; எப்போதும் உழைக்கும் மக்கள் மற்றும் ஏழைகளின் பக்கம் மட்டுமே இருப்போம்.

இந்த அரசு மதச்சார்பின்மையில் உறுதியாக இருக்க வேண்டும். ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும். இதில் அரசு தவறும் பட்சத்தில் நாங்கள் எதிர்த்துப் போராடவும், குரல் கொடுக்கவும் தயங்க மாட்டோம். தவெக அரசு மதச்சார்பின்மையை விடுத்து வேறு திசைக்கு நகர்ந்தால், அதற்கேற்ப உரிய முடிவை எங்கள் கட்சி எடுக்கும்” என்றார். இந்தச் சந்திப்பின் போது, ஜனநாயகத்திற்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்போதும் சமரசம் செய்துகொள்ளாது என அவர் உறுதியளித்தார்.

“இது அநீதிக்கும் தர்மத்திற்கும் நடக்கும் தேர்தல்”: மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கணித சம்பத் அனல் பறக்கும் பிரச்சாரம்!

MUST READ