Homeசெய்திகள்தமிழ்நாடு99% டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது- முத்துசாமி

99% டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது- முத்துசாமி

-

99% டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது- முத்துசாமி

நீதிமன்ற உத்தரவின் படி, மது விற்பனை நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

tasmac

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமியிடம், டாஸ்மாக் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நேற்றைய உத்தரவுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த அவர், அனைத்து மதுக்கடைகளிலும் விலைப்பட்டியல் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒன்று இரண்டு இடங்களில் மட்டும் இல்லை. 99 சதவீதம் மது கடைகளில் விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. அதையும் டாஸ்மாக் மேலாளர் மூலமாக அனைத்து இடங்களிலும் புகைப்படங்கள் எடுத்து அதை பட்டியலாக தயாரித்து நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க உள்ளோம் என்றார்.

வழக்கறிஞர்கள் ஆய்வு செய்ய நீதிமன்றம் சொல்லி இருப்பது, எங்களுக்கு ஊக்கமாக அமைவதுடன் பணிகளை விரைவுபடுத்த நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பயனுடையதாக இருக்கும் என கூறினார். மதுவிற்பனை நேரம் குறைப்பதற்கும் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அது குறித்த நீதிமன்றத்தின் முழு உத்தரவு கிடைக்கப்பெற்றதும், அதை நடைமுறைப்படுத்த ஆலோசித்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி கூறினார்.

வீட்டு வசதி துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டதில் பொதுமக்களிடம் இருந்து 6 ஆயிரம் புகார்கள் வரப்பெற்றுள்ளதாகவும், துறை அதிகாரிகள் மூலம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

MUST READ