
சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் நேற்று (மே 16) மின்தடை ஏற்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

சமீபத்திய புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தனது காதலனை மறைமுகமாக வெளியிட்டாரா?
இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “சென்னையில் முன் எப்போதும் இல்லாத அளவாக மின்நுகர்வு நேற்று 4,016 மெகாவாட் ஆக இருந்தது. சென்னையில் நேற்று 90.34 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. கோடைக்காலம் என்பதால் மின் நுகர்வு அதிகரித்துள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்
மின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாத நேரத்தில் மின்தடை ஏற்படுகிறது. மின் தேவையை சிறப்பாக மின்சார வாரியம் சமாளித்து வருகிறது. இரவில் புழுக்கம் காரணமாக, சென்னையில் மின் தேவை 4,000 மெகா வாட்டாக உயரும். தமிழகத்தில் இரவு நேரங்களில் 08.00 மணி முதல் 12.00 மணி வரை மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மின் தடைதான் ஏற்படுகிறது; மின் வெட்டு கிடையாது. தமிழகத்தில் கோடைக் காலத்தில் 19,387 மெகாவாட் மின் தேவை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.


