Homeசெய்திகள்தமிழ்நாடுநாங்குநேரி மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்– தங்கம் தென்னரசு

நாங்குநேரி மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்– தங்கம் தென்னரசு

-

நாங்குநேரி மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்– தங்கம் தென்னரசு

நெல்லை மாவட்டம் நான்குநேரியில் கடந்த 9ம் தேதி இரவு வீடு புகுந்து பள்ளி மாணவன் சின்னத்துரை , சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் கொடுரமாக வெட்டப்பட்டனர். இது நாட்டிலேயே பெரும் பரப்பை ஏற்படுத்தி இருந்தது இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட 6 சிறுவர்களை வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் நான்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

thangam

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சக பள்ளி மாணவர்களால் அரிவாளால் தாக்கப்பட்ட பள்ளி மாணவனையும், அவனது தங்கையையும் அமைச்சர் தங்கம் தென்னரசு, சபாநாயகர் அப்பாவு மற்றும் எம்.எல்.ஏ ரூபி மனோகனர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, நலமும் விசாரித்தனர். அப்போது பாதிக்கப்பட்ட மாணவனின் தாயாரிடம் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

thangam

மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “முதலமைச்சர் உத்தரவின்பேரில் மாணவனை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளோம். மாணவனின் தாயாரிடம் முதலமைச்சர் தொலைப்பேசி வாயிலாக பேசி, அவர்களுடைய படிப்பு தடை படாமல் இருக்க அரசு எப்போதும் உடன் இருக்கும் என்பதை தெரிவித்துள்ளார். அனைத்து வகையான உயர்சிகிச்சை வழங்கப்பட்டு, தற்போது மாணவன் சின்னதுரை நலமுடன் இருக்கிறார். குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

MUST READ