
தமிழக அமைச்சர்கள் ஆர்.காந்தி, ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகளை ஒதுக்கீடு செய்து, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

நடிகை ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ விவகாரம்… வீடியோ வெளியிட்ட 4 பேர் கைது…
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்த நிலையில், பொன்முடி தனது அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். இதையடுத்து, பொன்முடி வகித்து வந்த இலாகாக்களை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க, ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
ரஜினி, ஷாருக்கான் பட வாய்ப்பை தவிர்த்த புகழ்பெற்ற தொகுப்பாளினி… இது தான் காரணம்…
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை, அறிவியல் தொழில்நுட்பத்துறையைக் கூடுதலாக ஒதுக்கீடு செய்து ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதே சமயம், ராஜகண்ணப்பன் வசம் இருந்து வந்த கதர் மற்றும் கிராமத் தொழில் துறை, கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.