குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக தற்போது நீட் விலக்கு மசோதா காத்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆளுநர் தரப்பில் அதிக காலதாமதத்திற்கு பிறகு, குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக தற்போது நீட் விலக்கு மசோதா காத்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்தோம். நீட் தேர்வு முரண்பாடுகளால் நாடு தழுவிய எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிடுகிறோம். தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிடுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.