பாஜகவின் ஒற்றை ஆட்சிக்கு எதிராக மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி என்று இந்தியாவின் ஒரே குரலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குரல் ஒளிக்கின்றது.
ஒருவருடைய நோக்கம் தெளிவானதாக இருந்தால் போகும் பாதை சரியானதாக இருக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் நோக்கம் இருக்கிறது. அதனால் அவர் செல்லும் பாதையும் சரியானதாக இருக்கிறது.
ஒன்றிய அரசு ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உடை, ஒரே உணவு, ஒரே பண்பாடு – என்று உருவாக்க முயற்சி செய்து வருகிறது. இதை உறுதியாக எதிர்க்கும் ஒரே முதலமைச்சர், ஒரே அரசியல் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே.

(1) சமூக நீதி Social Justice (2) மதச்சார்பற்ற அரசியல் – Secular Political (3) சமதர்மம் – Socialism (4) சமத்துவம் – Equality (5) மாநில சுயாட்சி- State Autonomy (6) கூட்டாட்சி கருத்தியல் – Federalism என்கிற தத்துவங்களின் பின்னணியில் வளர்ந்து வந்த ஒரு தலைவர், இந்தியாவில் மாநிலங்களை அழித்து “ஒரே அரசு” என்ற நிலையை உருவாக்க முயற்சி செய்யும் பாஜகவை எதிர்க்காமல் இருக்க முடியாது.
இந்தியாவில் பல்வேறு இன கலாச்சார வேறுபாடுகள் கொண்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மக்களின் ஒற்றுமைக்கும், வளமான எதிர்காலத்திற்கும் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்கிற தத்துவம் மிகவும் முக்கியம்.
ஒரே நேரத்தில் தேர்தல், அதை ஒற்றை தேர்தலாக்கி, ஒற்றை தனிமனிதர் கையில் ஆட்சியை ஒப்படைத்து, இந்த நாட்டை சர்வதிகார நாடாக மாற்ற முயற்சிக்கும் போக்கை தொடக்கத்திலேயே எதிர்த்தவர் மு.க.ஸ்டாலின் தான்.
மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் 2152 கோடி நிதியை தரமுடியாது என்று ஒன்றிய அரசு கரார் காட்டியது. அதற்கு தமிழ்நாடு வாரி வாரி வழங்கும் நிதியை தரமுடியாது என்று சொல்வதற்கு ஒரு நொடி போதும், கொடுத்து பெறுவதுதான் கூட்டாச்சி தத்துவம் என்று எச்சரித்தவர் மு.க.ஸ்டாலின்.
திட்டங்களை செயல்படுத்துவதில் முதலமைச்சராக, இந்தியாவுக்காக வாதாடுவதில் முதல் முதலமைச்சராக, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்காகவும் குரல் கொடுப்பதில் முதல் முதலமைச்சராக, மற்ற மாநில முதலமைச்சர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் முதல் முதலமைச்சராக – திராவிட நாயகன் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்.
‘திராவிட மாடல் 2.0’-க்கு அடித்தளம் இடுங்கள்: பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
