
முதலமைச்சரே துணைவேந்தராகச் செயல்படும் ஜெயலலிதாவின் அறிவிப்பை உள்ள படியே மனதார பாராட்டுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆம்வே ரூபாய் 4,000 கோடி மோசடி- அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை!
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பல்கலைக்கழக வேந்தரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அத்துடன், திரையிசை பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் இது. தமிழகத்தில் முதலமைச்சரே வேந்தராக இருக்கும் பல்கலைக்கழகம் இது. இசை, கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சரே செயல்படுவார் என கடந்த 2021- ஆம் ஆண்டு ஜெயலலிதா அறிவித்தார்.
நவ.19-ல் உள்நாட்டில் 4.59 லட்சம் பேர் பறந்து சாதனை!
முதலமைச்சரே துணைவேந்தராக செயல்படும் ஜெயலலிதாவின் அறிவிப்பை உள்ள படியே மனதாரப் பாராட்டுகிறேன். முதலமைச்சரே துணைவேந்தராக இருந்தால் தான் பல்கலைக்கழகம் சிறப்பாகச் செயல்படும்” என்றார்.
இதனிடையே, விழாவில், “நீ இல்லாத உலகத்தில் நிம்மதி இல்லை” என்ற பி.சுசீலாவின் பாடலை மேடையில் பாடினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.