Homeசெய்திகள்தமிழ்நாடுகல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது- மு.க.ஸ்டாலின்

கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது- மு.க.ஸ்டாலின்

-

கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது- மு.க.ஸ்டாலின்

சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

MKStalin

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் வந்திருப்பது சிறப்புக்குரியது. நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் படித்த பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம். நானும் சென்னை பல்கலைக்கழக மாணவன் தான். சென்னை பல்கலைக்கழகத்தின் பயின்ற உங்களின் சீனியர் என்ற அடிப்படையில் நானும் இங்கு வந்துள்ளேன். இன்று பட்டம் பெறும் மாணவ செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நீங்கள் இன்று பட்டம் பெறுவதை பார்த்து உங்கள் பெற்றோர் அடையும் மகிழ்ச்சியை போல், ஒர் முதலமைச்சராக மட்டுமல்லாமல் உங்கள் குடும்ப உறுப்பினராகவும் மகிழ்ச்சி அடைகிறேன். படிப்பதை நிறுத்தி விடாதீர்கள், யாராலும் திருட முடியாத சொத்து கல்விதான். நீங்கள் பட்டம் பெறுவதை பார்த்து உங்கள் பெற்றோர் அடையும் மகிழ்ச்சியை நானும் அடைகிறேன். முதலமைச்சராக இல்லை, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக!

MKS

இந்தியாவில் தலைசிறந்த 10 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 18 நிறுவனங்கள் உள்ளன. தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 தமிழ்நாட்டில் உள்ளன. சிறந்த 10 கல்லூரிகளில் 32 தமிழ்நாட்டில் உள்ளன. சிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 தமிழ்நாட்டில் உள்ளன. சிறந்த 100 மருத்துவ கல்லூரிகளில் 8 தமிழ்நாட்டில் உள்ளன. 40 மருத்துவ கல்வி நிறுவனங்களில் 9 தமிழ்நாட்டில் உள்ளன. சிறந்த 30 சட்ட கல்லூரிகளில் 8 தமிழ்நாட்டில் உள்ள்ன. சிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 தமிழ்நாட்டில் உள்ளன. சிறந்த மேலாண்மை கல்லூரிகளில் 11 தமிழ்நாட்டில் உள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ