வீடு தேடிச் சென்று காய்கறிகளை விற்க நடவடிக்கை- முதல்வர் அதிரடி
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக அதிகாரிகள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்தார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், தக்காளி உட்பட காய்கறிகளின் விலைகளை குறைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின் வேளாண் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள உழவர் சந்தைகளை அதிகப்படுத்த வேண்டும். சந்தை விலையை விட, குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறிகள் கிடைக்க வேண்டும். உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகரிக்க வேண்டும். வீடு தேடிச் சென்று காய்கறிகளை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் செயல்பட்டது போல, மாநகராட்சி மூலம் நடமாடும் காய்கறி கடைகளை தொடங்கலாம். கொரோனா காலத்தை போல வீடு தேடி காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். தேவைப்பட்டால் தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல்கள் மேற்கொள்ளலாம்.” என்றார்.