spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்காளர்கள் நீக்கம்... தகுதி வாய்ந்தவர்களின் பெயர்களை சேர்க்க திமுக பிஎல்ஏக்கள்...

எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்காளர்கள் நீக்கம்… தகுதி வாய்ந்தவர்களின் பெயர்களை சேர்க்க திமுக பிஎல்ஏக்கள் உதவுவார்கள்… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

-

- Advertisement -
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாகவும், தகுதி வாய்ந்த விடுப்பட்ட வாக்களர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க திமுக முகவர்கள் உதவி செய்வார்கள் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“தூய்மை” நம் ஒவ்வொருவரின் சமூகப்பொறுப்பு!
சென்னை மெரினா கடற்கரையில் தினசரி கடைகளை அமைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு கைவினைப்பொருட்கள், சிகை அலங்காரப் பொருட்கள், பலூன்கள் மற்றும் பூக்கள் விற்பனை செய்துவரும் ஆண், பெண் மற்றும் குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் தங்குவதற்கு இடமின்றி குடும்பத்துடன் வெட்ட வெளியில் கடற்கரையில் தங்கி வந்தனர். இவர்களின் வாழ்க்கைச் சூழலை அறிந்து, அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் இரவுநேர காப்பகத்தை அமைத்துத் தர உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது‌. அதன் அடிப்படையில் சென்னை மெரினா கடற்கரை அண்ணா பூங்கா அருகில் முதற்கட்டமாக 86 நபர்கள் தங்கிடும் வகையில் 2,500 சதுர அடி பரப்பளவில் வீடற்றோருக்கான இரவுநேர காப்பகம் சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.86.40 லட்சம் செலவில் கட்டப்பட்டது.
இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். மேலும், காப்பகத்தில் தங்கிடும் 86 நபர்களுக்கு பாய், தலையணை, படுக்கை, படுக்கைவிரிப்பு, போர்வை, தட்டு, டம்பளர், தண்ணீர் பாட்டில், உள்ளிட்ட நல உதவி தொகுப்புகள் வழங்கினார். மேலும் காப்பகத்தில் தண்ணீர் மற்றும் மின்சார வசதியுடன் கூடிய நவீன தங்கும் அறை, மின்விசிறிகள், மின்விளக்குகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி கழிவறைகள் மற்றும் குளியலறைகள், பொருட்களை பாதுகாப்புடன் வைத்திட அலமாரிகள் என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
காப்பகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- மெரினா கடற்கரையில் இரவு நேர காப்பகத்தை திறந்து வைத்துள்ளோம். மழை, வெயில் போன்ற நேரங்களில் இடமில்லாமல் உள்ளவர்களுக்கு இந்த காப்பகம் வசதியாக இருக்கும். ஆண்கள், பெண்கள் தனியாக கழிவறைகள், குடிநீர் வசதி, மின்வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெட், பாய் உள்ளிட்ட 15 அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உள்ளோம். மெரினாவில் தங்கி இருக்கக்கூடிய மற்றவர்களுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். மாநகராட்சி சார்பில் ஏற்கனவே 45 இடங்களில் இந்த மாதிரி வசதிகள் உள்ளது. கூடுதலாக இந்த வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"தமிழகத்தில் 12.55% வாக்குப்பதிவு"- தேர்தல் ஆணையம் தகவல்!
சென்னையில் 14 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே sir திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். இவ்வளவு கால அவகாசம் போதாது என தெரிவித்துள்ளோம். பல மாநிலங்களில் குறிப்பாக பீகாரில் sir மூலமாக வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் தெளிவாக கூறினார்.

எதிர்பார்த்ததைவிட அதிகமாக 95 லட்சம் வாக்காளர்களும், சென்னையில் 14 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் விடுப்பட்டவர்கள், மாற்றப்பட்டவை உள்ளிட்டவர்களை எப்படி சேர்ப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கி உள்ளார். பொதுமக்கள் தங்களது வாக்குகள் உள்ளனவா? என உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறினார். அவர்களுக்கு தேவையான உதவிகளை பிஎல்ஏ-க்கள் செய்து தருவர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயநிதிமாறன், மேயர் ப்ரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

MUST READ