spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"அந்த திரைப்படத்தை திரையரங்கில் காண ஆவலாக இருக்கிறேன்"- அன்புமணி ராமதாஸ் ட்வீட்!

“அந்த திரைப்படத்தை திரையரங்கில் காண ஆவலாக இருக்கிறேன்”- அன்புமணி ராமதாஸ் ட்வீட்!

-

- Advertisement -

 

Anbumani Ramadoss

we-r-hiring

தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபல திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 1- ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது.

77வது சுதந்திர தின விழா – ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையர் சங்கர் தேசியக்கொடி ஏற்றினார்

இந்த திரைப்படத்தை திரையரங்கில் காண்பதற்கு ஆவலாக இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், “இயக்குனர் தங்கர் பச்சானின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் ’கருமேகங்கள் கலைகின்றன’ என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கவுதம் மேனன், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

குடும்ப உறவுகளின் மேன்மையைப் பேசும் உன்னத படமாக இருக்கும் என்று நம்புகிறேன். செப்டம்பர் 1-ஆம் நாள் வெளியாகவிருக்கும் அத்திரைப்படத்தை திரையரங்கில் காண்பதற்கு நான் ஆவலாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ