
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி வருவதற்கு முன் அரசு விழா தொடங்கியதால், அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.பி.யின் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ஆதரவாளர்கள் தள்ளியதில் மாவட்ட ஆட்சியர் கீழே விழுந்தார்.

விமர்சனங்களை தாண்டி வசூலில் சாதிக்கும் ஆதிபுருஷ்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில், அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி வருவதற்கு முன், அமைச்சர் ராஜகண்ணப்பனை வைத்து நிகழ்ச்சித் தொடங்கப்பட்டது.
இது குறித்து நவாஸ் கனி எம்.பி. மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட போது, அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ் கனியை ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு உண்டானது. அப்போது, அருகில் நின்றுக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை, ஆதரவாளர்கள் தள்ளியதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்தார்.
விஜயின் பேச்சை பாராட்டிய இயக்குனர் கரு பழனியப்பன்!
காவல்துறையினர், தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர். இதனையடுத்து, விழாவில் கலந்து கொள்ளாமல் நவாஸ் கனி எம்.பி. அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.