மாநகர் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுட்கால சான்றிதழை தலைமை அலுவலகம் / பணிமனை / இ-சேவை மையம் வாயிலாக சமர்ப்பிக்கலாம் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஏறத்தாழ 14,800-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்றுள்ளோர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி நம்பகத்தின் வாயிலாக, ஓய்வூதியமானது வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுட்காலச் சான்றிதழை ஏற்கனவே, நடைமுறையில் உள்ளவாறு தாங்கள் கடைசியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற அலுவலகம் / பணிமனையிலேயே சமர்ப்பித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான ஆயுட்காலச் சான்றிதழை, வரும் 2025-ஜனவரி மாதம் தொடங்கி, 2025-மார்ச் 15-ஆம் தேதிக்குள்ளாக, அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்க வரும்பொழுது, ஓய்வூதிய உத்தரவு ஆணை எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கடைசியாக ஓய்வு பெற்ற பணிமனை மற்றும் ஆயுட் கால சான்றிதழ் சமர்பிக்க வேண்டிய இடங்களை தெரிவித்துள்ளது. 1.தலைமையக அலுவலர்கள், தலைமை நிதி அலுவலர், தலைமையகத்திலும், 2.தலைமை அலுவலக பணியாளர்கள், தலைமை அலுவலகத்திலும், 3.பட்டுலாஸ்சாலை தொழிற்கூடம் (PRD), பட்டுலாஸ்சாலை தொழிற்கூடம் (PRD), 4.மண்டல தொழிற்கூடத்தில் (RWS),மண்டல தொழிற்கூடத்தில் (RWS), 5.கே.கே.நகர் பயணச்சீட்டு அச்சகம், கே.கே.நகர் பணிமனை, 6.குரோம்பேட்டை பேருந்து கூடுகட்டும் பிரிவு, குரோம்பேட்டை-1 பணிமனை, 7.மகாகவி பாரதி நகர் பணிமனை,வியாசர்பாடி பணிமனை,
8.பெசன்ட் நகர் பணிமனை,அடையார் பணிமனை, 9.செம்மஞ்சேரி பணிமனை, பெரும்பாக்கம் பணிமனை, 10.கிளாம்பாக்கம் பணிமனை, கிளாம்பாக்கம் பணிமனை,மேலும், விடுபட்டவர்கள் தலைமையலுவலகத்தினை அணுகி, தங்களின் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 044-2345 5801-Extn.268 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
மாநகர் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள். தங்களது வீட்டிற்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தில், TNS-103 என்னும் இணையதள முகப்பில், தங்களது ஆதார் அட்டை புகைப்படம், ஓய்வூதிய உத்தரவு ஆணை, வங்கி புத்தகம் மற்றும் கைபேசி எண் பதிவு செய்யலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு வெடிக்க தடை: காவல்துறை அறிவிப்பு