spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

-

- Advertisement -

 

we-r-hiring

இன்று (பிப்.02) காலை 05.00 மணி முதலே என்ஐஏ அதிகாரிகள், தமிழகத்தின் சென்னை, மதுரை, நெல்லை, கோவை, சிவகங்கை உள்ளிட்ட நகரங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 50- க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பழைய எலக்ட்ரானிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

கோவை மாவட்டத்தில் ஆலாந்துறை ஆர்.ஜி.நகரில் ரஞ்சித், காளபட்டியில் உள்ள முருகன் ஆகியோர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பிற நாட்டில் தடைச் செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா என்ற சந்தேகத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, விடுதலைப் புலிகள் ஆதரவாளர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை முருகன் வீடுகளில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விஷ்ணு வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

இதனிடையே, இடும்பாவனம் கார்த்தி இன்று (பிப்.02) காலை 09.30 மணிக்கு சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நேரில் ஆஜராக என்ஐஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

MUST READ