
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை என்றழைக்கப்படும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சைரன் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டதா?
இன்று (பிப்.02) காலை 07.00 மணி முதலே என்ஐஏ அதிகாரிகள், தமிழகத்தின் சென்னை, மதுரை, நெல்லை, கோவை, சிவகங்கை உள்ளிட்ட நகரங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 50- க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் ஆலாந்துறை ஆர்.ஜி.நகரில் ரஞ்சித், காளபட்டியில் உள்ள முருகன் ஆகியோர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பிற நாட்டில் தடைச் செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா என்ற சந்தேகத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பிளாக்பஸ்டர் பக்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கும் நயன்தாரா!
என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.