Homeசெய்திகள்தமிழ்நாடு'நீங்கள் நலமா' திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘நீங்கள் நலமா’ திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

'நீங்கள் நலமா' திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு அரசு சார்பில் ‘நீங்கள் நலமா’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசின் திட்டங்கள் குறித்து மக்களை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு அதிகாரிகள் கருத்துக் கேட்டறிவர். மக்களின் கருத்து அடிப்படையில் திட்டங்களை மேலும் செம்மைப்படுத்த ‘நீங்கள் நலமா’ என்ற திட்டம் உதவும்.

என் மனைவி உயிரோடு இருப்பதற்கு ரஜினி சார் தான் காரணம்….. நடிகர் லிவிங்ஸ்டன்!

திட்டங்களுக்காக காத்திருப்பவர்கள், பலன் பெற்றவர்கள் என அனைவரையும் அணுகுவதே திட்டத்தின் நோக்கம். மக்களை நோக்கி இனி அரசு வரும், மக்களின் நலனை அறிய அரசு காது கொடுக்கும் என்ற நோக்கில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தின் கீழ் தனலட்சுமி என்ற பயனாளியிடம் முதலமைச்சர் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

சென்னையில் நடந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆம் இது குடும்ப ஆட்சிதான்; தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் கை தூக்கிவிடும் ஆட்சி இது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். மக்களின் கைகளில் மனுக்களைக் காண முடியவில்லை; மாறாக அவர்களின் முகங்களில் மகிழ்ச்சியைக் காண்கிறோம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என அண்ணா சொன்னதை இப்போது மக்களின் முகங்களில் காண்கிறேன்.

லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

கோட்டையில் உட்கார்ந்து திட்டங்களை அறிவிப்பதோடு கடமை முடிந்ததாக நினைப்பதில்லை. ஒவ்வொரு திட்டத்தின் நோக்கமும் நிறைவேற்றப்பட்டு வருகிறதா என்பதே எனக்கு முக்கியம். நலத்திட்டம் ஒரு ரூபாய் என்றாலும் எது மக்களிடம் சேர வேண்டும் என திட்டங்களைத் தீட்டுகிறேன். மத்திய அரசின் ஓரவஞ்சனையால் தமிழ்நாட்டுக்கான நிதி உதவிகள் படிப்படியாகக் குறைக்கப்படுகின்றன.

மாநில அரசுக்கு தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி தருவதாக அப்பட்டமான பொய்யை பிரதமர் சொல்லியிருக்கிறார். எந்த மக்களுக்கு கொடுத்தார் என்பதைக் கூறியிருந்தால் அந்த மக்களுக்கு கிடைத்ததா எனக் கேட்கலாம். இரண்டு மாபெரும் இயற்கைப்பேரிடரை 8 மாவட்ட மக்கள் சந்தித்தனர். இயற்கைப் பேரிடருக்காக 1 ரூபாயையாவது ஒதுக்கி தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதமர் உதவினாரா? ஒரு ரூபாய் கூட ஒதுக்காமல் பிரதமர் இப்படியா பொய்களை சொல்வது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ