Homeசெய்திகள்சினிமாஎன் மனைவி உயிரோடு இருப்பதற்கு ரஜினி சார் தான் காரணம்..... நடிகர் லிவிங்ஸ்டன்!

என் மனைவி உயிரோடு இருப்பதற்கு ரஜினி சார் தான் காரணம்….. நடிகர் லிவிங்ஸ்டன்!

-

நடிகர் ரஜினி, ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு தனது 170 ஆவது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்க லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கிடையில் ரஜினி தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. என் மனைவி உயிரோடு இருப்பதற்கு ரஜினி சார் தான் காரணம்..... நடிகர் லிவிங்ஸ்டன்!இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்த பேட்டியில் நடிகர் லிவிங்ஸ்டன் ரஜினி குறித்து பேசி உள்ளார். அதாவது லால் சலாம் படப்பிடிப்பு சமயத்தில் லிவிங்ஸ்டன் மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதன் மருத்துவ சிகிச்சைக்காக அதிக பணம் தேவைப்பட்டதாகவும் இதற்காக நடிகர் ரஜினி, லிவிங்ஸ்டனுக்கு 15 லட்சம் வரை கொடுத்து உதவியதாகவும் கூறியுள்ளார்.

“என்னுடைய மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது நானும் என் குழந்தைகளும் மனமுடைந்து போனோம். சிகிச்சைக்காக மருத்துவர்கள் அதிக பணம் செலவாகும் என்று கூறிவிட்டார்கள். என்ன செய்வது ஏது செய்வது என்று எதுவுமே எங்களுக்கு தெரியவில்லை. நான் இந்த விஷயத்தை லால் சலாம் படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குனரிடம் தெரிவித்திருந்தேன். ரஜினி சாருக்கு இந்த விஷயம் எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை ஆனால் அவர் கடவுள் போல் வந்து உதவினார். நான் உன் அண்ணன் மாதிரி ஒரு அண்ணன் கொடுத்தால் வாங்க மாட்டியா, வேறு என்ன உதவி வேண்டுமானாலும் கேள் என்று சில ஆறுதல் வார்த்தைகளை கூறி மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி செய்தார்” என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் லிவிங்ஸ்டன்.

MUST READ