பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஃபாஸ்டாக் (FASTag) நடைமுறையில் புதிய விதி அமலுக்கு வரும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவிப்பின்படி, பிப்ரவரி 1 முதல் ஃபாஸ்டாக் (FASTag) நடைமுறையில் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. இதன் மூலம், இதுவரை நடைமுறையில் இருந்த KYV (Know Your Vehicle) என்ற வாகன உறுதிப்படுத்தும் முறை ரத்து செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட KYV முறையின் மூலம் , ஃபாஸ்டாக் சரியான வாகனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்த நடைமுறையில் புகைப்படங்கள், ஆவணங்கள் சமர்ப்பித்தல் போன்ற தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டதாக பல புகார்கள் எழுந்தன.

எனவே, இனி fastag பாஸ்டேக் பெற KNOW YOUR VECHILE எனப்படும் KYV நடைமுறை தேவையில்லை என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய அறிவிப்பபை வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கார், ஜீப் மற்றும் வேன் போன்ற வாகனங்களுக்கு KYV (Know Your Vehicle) எனப்படும் வாகனத்தை உறுதி செய்யும் முறை நடைமுறையில் இருந்தது. தற்போது மத்திய அரசு இந்த முறையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
KYV முறைக்கு மாற்றாக, இனி ஃபாஸ்டாக் வழங்கும் முன் வங்கிகள், அந்த வாகனத்தின் விவரங்களை மத்திய அரசின் VAHAN (வாகன்) தரவுத்தளத்தில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனத் தரவுகளை VAHAN மூலம் சரிபார்த்து ஃபாஸ்டாக் வழங்கும் இந்த புதிய முறையானது, வருகின்ற பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
VAHAN தரவுத்தளத்தில் வாகன விவரங்கள் உள்ளதா என்பதை டிஜிட்டல் முறையில் உறுதி செய்த பின்னரே ஃபாஸ்டாக் வழங்கப்படும். ஒருவேளை, குறிப்பிட்ட வாகனத்தின் தகவல்கள் VAHAN தளத்தில் இல்லை என்றால், அந்த வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC Book) நேரடியாக சரிபார்க்கப்பட்ட பிறகே ஃபாஸ்டாக் வழங்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், இனி வாகன உரிமையாளர்கள் தனிப்பட்ட முறையில் பல ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. VAHAN தரவுத்தளத்தின் மூலம் டிஜிட்டல் சரிபார்ப்பு செய்து ஃபாஸ்டாக் வழங்கப்படும். இருப்பினும், விதிமுறைகளை மீறும் சந்தர்ப்பங்களில் மட்டுமே KYV நடைமுறை மீண்டும் கேட்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
அமித்ஷாவிடம் சரண்டர் ஆன விஜய்! கழுத்தை பிடித்த சிபிஐ! ராஜகம்பீரன் நேர்காணல்!


