spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது- நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது- நிர்மலா சீதாராமன்

-

- Advertisement -

நாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது- நிர்மலா சீதாராமன்

தமிழ்நாட்டில் தயாரான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்படுவது பற்றி ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக சென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாடு சுதந்திரம் பெற்றதை செங்கோல் குறிகிறது. ஆட்சி பரிமாற்றத்தைக் குறிக்க செங்கோல் பரிமாற்ற செய்யும் முறை இன்னும் பல நாடுகளில் அமலில் உள்ளது. நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் 3 மாநில ஆளுநர்கள், ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து திருவாவடுதுறை, குன்றக்குடி, பழனி உள்ளிட்ட 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆதினங்கள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொண்டு தேவாரம் ஒதுவார்கள். 1947-ல் கூட ஒதுவார்கள் ஓதிதான் செங்கோல் நேருவின் கையில் கொடுக்கப்பட்டது. அதேபோல் நாடாளுமன்றத்தில் தேவாரம் பதிகம் பாடி செங்கோல் வழங்கப்படும். மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது.

we-r-hiring

Image

குடியரசுத் தலைவர் மிகவும் உயர்வாக கருதுகிறோம். அது ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல. ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தை திறக்கும் நிகழ்வில் அனைவரும் பங்கேற்க வேண்டும். பிரதமர் மோடி பிடிக்கவில்லை என்றாலும் புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளவேண்டும். ஜனாதிபதி முர்முவை கடுமையாக விமர்சித்தவர்கள், இன்று நாடாளுமன்றத்தை அவர் தான் திறக்க வேண்டும் என கோருகிறார்கள்.  செங்கோலை தயாரித்த உம்மிடி பங்காரு நகைக்கடை அதிபர்களை பிரதமர் மோடி கெளரவிப்பார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்படவுள்ள செங்கோல் பற்றிய வரலாறு மற்றும் விவரங்கள் http://sengol1947.ignca.gov.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன” எனக் கூறினார்.

MUST READ