Homeசெய்திகள்தமிழ்நாடுஎன்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு - அதிமுக உண்ணாவிரதம்

என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு – அதிமுக உண்ணாவிரதம்

-

என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு – அதிமுக உண்ணாவிரதம்

அதிமுக சார்பில் புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் தலைமையில் ஒன்றிய நிறுவனம் என்.எல்.சி.யை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

Image

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்தன. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. கடந்த வாரம் என்.எல்.சியை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Image

இந்நிலையில் என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வளையமாதேவி கிராமத்தில் அதிமுக எம்எல்ஏ போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், புவனகிரி எம்எல்ஏ அலுவலகம் முன் நடைபெறும் போராட்டம் நடைபெறுகிறாது. போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், விளைநிலங்களில் கால்வாய் வெட்டும் பணியை என்எல்சி நிர்வாகம் கைவிட வலியுறுத்தினர்.

MUST READ