பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வாய்ப்பு,15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பருக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
குழந்தை பிறந்து 15 ஆண்டுகளில் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வேண்டும். அவ்வாறு பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் பெயர் சேர்த்துக்கொள்ள வேண்டுமென பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட வருவாய் மற்றும் சுகாதார இணை மற்றும் துணை இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களின் பிறப்புச் சான்றிதழில் பெயர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பெயர் விடுபட்டிருந்தால் மாணவர்கள் மூலம் பெற்றோர்களுக்கு தகவல் அளித்து பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெற்றோர் மற்றும் பாதுகாப்பாளரின் கையொப்பமிட்ட படிவம் பெற்று பெயர் சேர்க்கலாம் எனவும், பிறப்பு சான்றிதழ் குறித்து எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த ஆண்டுக்குள் பெயர் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுசுகாதாரத்துறை இயக்குனரும், பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவாளருமான செல்வ விநாயகம் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.