spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஓலா, ஸ்விக்கி ஊழியர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“ஓலா, ஸ்விக்கி ஊழியர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

-

- Advertisement -

 

"ஓலா, ஸ்விக்கி ஊழியர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Photo: TN Govt

சென்னையில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக் கம்பத்தில் மூவர்ணக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

we-r-hiring

தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதைத் தொடர்ந்து, விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வரும் ஆகஸ்ட் 25- ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்படும். மாணவர்களின் உடல்நலன், மன வலிமையைக் காத்திடும் வகையில் திட்டம் விரிவாக்கப்படும். ‘ஏற்றம் மிகு ஏழு திட்டங்கள்’ அடிப்படையில் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது.

செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!

சென்னை செங்காந்தன் பூங்காவிற்கு அருகில் ரூபாய் 25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும். மாணவர்கள் நல் ஆளுமை பெற வேண்டும் என்பதற்காகவே நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது. நான் முதல்வன் திட்டம் மூலம் 13 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். ஓலா, உபேர், ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். மக்களுக்கு நேரடித் தொடர்புக் கொண்ட கல்வி உள்ளிட்ட அனைத்தும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

MUST READ