spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅம்பத்தூர் : விஜய் பிறந்தநாளையொட்டி ரூ.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்..

அம்பத்தூர் : விஜய் பிறந்தநாளையொட்டி ரூ.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்..

-

- Advertisement -

விஜய் பிறந்தநாள் விழா

நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளையொட்டி சென்னை அம்பத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரோபோ சங்கர், ஸ்ரீநாத், சவுந்தர் ஆகியோர் பங்குபெற்றனர்.

we-r-hiring

நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய்யின் 50வது பிறந்தநாளை ஒட்டி சென்னையை அடுத்த அம்பத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் ரோபோசங்கர், நடிகர் சவுந்தர், நடிகர் ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டு ரூ. 20 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு தையல் இயந்திரம், ஐயர்ன் பாக்ஸ், கேஸ் ஸ்டவ், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டி, அரிசி, புடவை-வேட்டி, அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நடிகர் ஸ்ரீநாத்

மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பார்வையற்ற மாணவிகளுக்கு 5,000 காசோலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பேசிய நடிகர் ஸ்ரீநாத், “இந்தியாவிலே தற்போது அதிக சம்பளம் பெற கூடிய ஒரே நடிகர் என்றால் தளபதி விஜய் தான். ஆனால் அவற்றை விட்டுவிட்டு மக்கள் பணியாற்றுவதற்காக அரசியலில் ஈடுப்பட்டுள்ளது, ஒரு நண்பணாக என்னைவிட ரசிகர்களாகிய உங்களுக்கு தான் அதிக பெருமை” என கூறினார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

MUST READ