Homeசெய்திகள்தமிழ்நாடுடெல்லியில் இன்று நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார் ஓ.பி.ரவீந்திரநாத்

டெல்லியில் இன்று நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார் ஓ.பி.ரவீந்திரநாத்

-

டெல்லியில் இன்று நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார் ஓ.பி.ரவீந்திரநாத்

மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசிக்க அதிமுக சார்பில் தன்னை அழைத்துள்ளதாகவும், அதன் பேரில் தான் கலந்துக்கொள்ள இருப்பதாகவும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்-ன் மகன் ஓ.பி ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Image

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) தொடங்கவுள்ளது. வரும் ஆகஸ்ட் 11- ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும், இந்த கூட்டத்தொடரில் டெல்லி அதிகாரம் மசோதா உள்ளிட்ட 21 புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

இந்நிலையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளை (20.07.2023) புதுடெல்லியில் தொடங்கவிருக்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று (19.07.2023) மாலை 05:30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பாக மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்கள் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அழைப்பு விடுத்ததின் பேரில் அ.இ.அ.தி.மு.க சார்பில் கழக மக்களவை தலைவராக நான் கலந்து கொண்டு சிறப்பித்து ஆலோசனை வழங்க உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ